Pages

என் தோட்டக் கோசா

கனா கண்டேன் விதையிட்ட போது,

மாமன் வரும் கணம் கனிவாயென்று;

மண்டியிட்டேன் முதல் குருது தலை காட்டிய போது,

உறுதியாய் நின்று நலமோடு கனிய;

மண்றாடினேன் உருவம் தென்பட்ட போது,

வீட்டுக் கண்வித்தைப் பெருச்சாலிகளிடமிருந்து தப்பிக்க;

தப்பித்தும் வெப்பப் புழுக்கத்தின் காந்தலில் வாடிய போது,

பயத்துடன் பறித்தேன் காயாய் கசப்பாயென்று மாமன் விடைபெற்றவுடன்;

நடுக்கத்துடன் குருவால் கொண்டு வெட்டிய போது,

பூரிப்படையச் செய்தாய் செங்கனி திரண்டு;

வெட்டு்ற்று கசக்கிய போது,

இனிப்பாய் தித்தித்தாய் நாவிற்கு விருந்தாய்;

மாமன் மறுபுற வீட்டை அடைந்த போது,

செல்பேசியில் இவ்வனைத்து நிஜமும் வண்ணப் புகைப்படமாய்

என் தோட்டக் கோசா!












சாய்நாற்காலி

ஓய்விற்கு ஒய்யாரம்

வீட்டிற்கு ஒன்று

விரும்புபவர் கணக்கில்லை

தான் ஓய்வெடுக்கும் என்றும்

விடுமுறை அன்றோ உனக்கா எனக்கா என்ற போராட்டம்

ஒன்றுக்கு இரண்டுண்டு இன்று

போட்டியிட ஆளில்லாமல்

தனிமையில் வாடுது

சாய்நாற்காலி!




கருணாநிதி நாற்காலி

நான் உயிர்த்தேன் உன் முதுமையின் இன்ப பயணத்தில்

கோடான கோடி உடன்பிறப்பினும் நான் உடன் இருப்பவனானேன்

குடும்பத்தில் ஓர் அங்கமாய் அனைவரும் என் அங்கம் அறிவர்

எண்ணில்லா தருணங்கள் கடந்தோம் உடனிருந்து

என்ன தான் நாம் இணைந்து இயலாமையை வென்றாலும்

காலத்தை யாரேனும் வெல்ல முடியுமோ

சாதாரன சமயங்களில் உடனிருந்தேன்

உன் இறுதிப் பயணத்தில் என்னை தனித்திட்டு

கருவிக்கும் இடைப்பட்ட இறப்புண்டு என நிரூபனமானது

அடுத்த ஜென்மத்தில் முடிந்தால் சந்திப்போம்

இப்படிக்கு காத்திருக்கும் நாற்காலி!


ஆசை முதல் வண்டி

காலமெல்லாம் என்னோடு அணுஅணுவாய் நகர்ந்து

கைகாட்டிய இடமெல்லாம் எட்டிட்டு வழிநடத்தி

இருளில் ஒளி பரப்பி, என் ஆழ்மனதச்சத்தை விலக்கி

சாலையின் மேல் தவறு செய்தால் தண்டித்து

கடிதான சூழ்நிலைகளில் இடையூறின்றி நகர்ந்து

தங்கத்தாரகையாய் மின்னிய வண்ணம் சிரிக்கும்

என் ஆசை முதல் வண்டி!


பவானி

கோடிட்டுக் காத்திருந்தவன்

கோடுகளை சரிபார்த்து

கச்சிதத்திற்கு பரிசாய்

முளைப்புக்கு நீர்வாரிச் சென்றது

மழை, மலையிறங்கிய

பவானி!