Pages

நொடிமுள்

நிற்காமல் ஓடும், இதயம் நின்றாலும்

பெரிய சிறிய தமையன்களை கூட்டிக் கொண்டு

கணக்கிட்டுக் கடப்பான் கணங்களை

அடுத்தவர் எண்ணத்தை பொருட்படுத்தாமல்

தன் பணியில் கருத்தாயிருப்பான்

நொடிமுள்!


கூடை

ஒருவிதக் கலை

வர்ணங்களை சுழற்றியவாறு

அடிகளைஅளந்து

கோடுகளை வழிநடத்தி

சிக்கல்களை தவிடுபொடியாக்கி

கற்பனையில் உதித்த ஓவியத்தை

கையில் உயிர்பித்தால்

கூடை!


கொலுசு

முத்துக்களும் மணிகளும் அணிவகுத்து நின்று

வெள்ளி தங்கக்கொடி கம்பளம் விரித்து

மண்ணுலகின் வண்ணங்களை வைர வைடூரியங்களை பூட்டி

இவ்வுலகை ஆள உந்தூர்தியாய் காப்பிட்டு

தடம்புரளாமல் இருக்க  ஒலிக்கடிவாளம் கட்டும்

மண்தொடா பாதங்களை அலங்கரித்த

கொலுசு!



மகளின் முதல் ஓவியம்

முகத்தில் பெருமித புன்னகையோடு

பிஞ்சு விரல்கள்

சுட்டிக்காட்டிய தான் வரைந்த தாமரை,

சிவப்போ பச்சை நிறமோ

ஒன்றோ இரண்டோ எண்ணிக்கையில்

வளைந்தோ மடங்கியோ உருவத்தில்

நீரில் மிதந்தோ தரையில் நின்றோ

இலையோடு இணைத்தோ விலகியோ

என்னவென்று விவரிப்பது

தன் மனதில் மலர்ந்த தாமரையை

தன் மகளின் முதல் ஓவியத்தை பார்த்து!


வேகத்தடை

சிலு சிலு காற்று

கதை பேசும் கார்குழல்

ரசித்த வண்ணம் வானத்தின் ஓவியம்

துடிக்கும் வாலிப மனது

மின்னல் வேகம்

மனதில் மகிழ்ச்சி

சடக்கென்று ஒரு சலசலப்பு

வேகத்தடை

சிறுகண மகிழ்ச்சிக்கு ஈடில்லா உயிரை பலி கொடுக்காதே
என்று நினைவூட்டியது


குடும்பம்

கதிரவன் காணில் நிழலாய் தொடர்ந்து

சந்திரன் காணில் ஒழியாய் வழிநடத்தி

பிறரினும் மேலாய் நான் விளங்க என் வழி நீ நின்று என்னை தயார்படுத்துகிறாய்

என் குடும்பம்;



நெடுஞ்சாலை

நெடு நெடுவென நீண்டு

நெகிழ்வோடு வளைந்து

இருபக்கமும் மரங்கள் காவல்காக்க

பூச்செடிகள் புன்னகைக்க

மேற்கூரையாய் வானம் மூடாக்கிட

கரடுமுரடாய் வாகனங்கள் தன்மேல் வலம்வர

அவ்வபோது துயரம் கண்டும் காணாததுமாய்

தன் இயல்பில் இருந்து மாறாது

சுரியனின் வெப்த்தையும் கானல்நீராய் பிரதிபலிக்கும்

கோடிட்ட ஆடையை அணிந்திருக்கும்

நெடுஞ்சாலை!!!


மழைத்துளி

மழைத்துளி

மென்மையாய் நிதானமாய் கைகோர்த்து

நாம் வியக்கும் வண்ணம்

நாற்சக்கர வண்டிக் கண்ணாடியில்
வழிந்தோடியது

மழைத்துளி!